Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

6 வருடங்களுக்குப்பின் கொடைக்கானலை ஆச்சரியப்படுத்திய அரிய வகை ‘பாம்புத்தாரா’

6 வருடங்களுக்குப்பின் கொடைக்கானலை ஆச்சரியப்படுத்திய அரிய வகை ‘பாம்புத்தாரா’
பாம்புத்தாரா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் கால நிலைக்கு ஏற்றவாறு பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இங்கு குளுமையான கால நிலை நிலவுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு கடந்த 6 வருடங்களுக்கு பிறகு பாம்புத்தாரா (ORIENTAL DARTER) என்ற நீர் வாழ் பறவை வந்துள்ளது. ஏரி தூய்மையாக இருப்பதாலும், மீன் அதிகமாக இருப்பதாலும் பறவைகள் வருவதாக பறவையின ஆர்வலர் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் கால நிலைக்கு ஏற்றவாறு பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது இங்கு குளுமையான கால நிலை நிலவுகிறது. இதனையடுத்து நீர்க்காகம் ( கிரேட் கார்மொரண்ட்) வந்த நிலையில், தற்போது பசுமை நிறைந்த நீர் நிலைகளில் மட்டும் காணப்படும் பாம்புத்தாரா என்ற பறவை 6 ஆண்டுகளுக்குப் பின் நட்சத்திர ஏரிக்கு வந்துள்ளது.

மேலும் ஏரியில் ஜோடியாக முகாமிட்டு, ஏரியின் உள் பகுதிக்குள் சென்று பெரிய மீன்களை உட்கொண்டு வருகிறது. மேலும் இந்த பறவையானது ஏரி தூய்மையாக இருப்பதாலும், பெரிய அளவில் உள்ள மீன்கள் இருப்பதால் இந்த பறவை இடம்பெயர்ந்து வந்துள்ளதாக பறவை இன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பறவையை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

முந்தைய செய்தி
தமிழகத்தில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு - அமைச்சர் அருண்ராஜ்
அடுத்த செய்தி
4.1 ரிக்டர் நிலநடுக்கம் - உயிரிழப்புகள் நிலவரம்

தொடர்புடைய செய்திகள்